10-ஆம் வகுப்பு கணிதத் தேர்வை வேறு தேதிக்கு மாற்ற கோரிக்கை

 
exam

ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைபெற உள்ள 10-ஆம் வகுப்பு கணிதத் தேர்வை வேறு தேதிக்கு மாற்ற ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

exam

10, 11, 12 ஆம் வகுப்பு களுக்கான பொது தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா  மொழி இன்று வெளியிட்டார்.  பத்தாம் வகுப்புக்கு மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை பொது தேர்வு நடைபெறுகிறது. அதேபோல 11ம் வகுப்புக்கு மார்ச் 4-ம் தேதி தொடங்கும் பொது தேர்வானது மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  12ஆம் வகுப்புக்கு மார்ச் 1ம் தேதியே பொது தேர்வு தொடங்கும் நிலையில் 22 ஆம் தேதி வரை நீடிக்கிறது.

குறிப்பாக பத்தாம் வகுப்பு மொழிப்பாடங்கள் 26.03.24 ஆம் தேதி மொழி பாடமும், 28.03.24 ஆம் தேதி ஆங்கிலமும், 01.04.24 ஆம் தேதி கணிதமும், 04.04.24 அன்று அறிவியலும், 06.04.24 அன்று விருப்ப மொழித் தேர்வும், 08.04.24 அன்று சமூக அறிவியல் தேர்வும் நடைபெறம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைபெற உள்ள 10-ஆம் வகுப்பு கணிதத் தேர்வை வேறு தேதிக்கு மாற்ற பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர். முந்தைய நாட்களில் புனித வெள்ளி, ஈஸ்டர் திருநாள் வருவதால், தேர்வு தேதியை மாற்றி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.