9 காரட் தங்கத்துக்கும் 'ஹால்மார்க்' முத்திரை வழங்க கோரிக்கை

 
tt

வரலாறு காணாத விலை உயர்வை அடுத்து, 9 காரட் தங்கத்துக்கும் 'ஹால்மார்க்' முத்திரை வழங்க இந்திய தங்கக் கட்டி மற்றும் நகை கடைக்காரர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

gold

தங்கம்,  வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் ஒன்பது காரட் தங்கத்துக்கும் ஹால்மார்க் முத்திரை மற்றும் தனிப்பட்ட அடையாள எண்களை அறிமுகப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.  14 ,18,  22 கேரட் தங்கத்துக்கு மட்டும் ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டு வருகிறது.

gold

 இந்த சூழலில் இந்திய தங்க கட்டி மற்றும் நகை கடைக்காரர்கள் சங்கம் இந்திய தர நிர்ணய கழகத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதில் ஒன்பது காரட் தங்கத்துக்கும் ஹால்மார்க் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதன் மூலம் தங்கத்தின் முதலீடு மேற்கொள்ள முதலீட்டாளர்களுக்கு ஊக்கம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நேற்றைய நிலவரப்படி 10 கிராம் கொண்ட ஒன்பது காரட் தங்கத்தின் விலை 24,70 கூடுதலாக மூன்று சதவீதம் ஜிஎஸ்டி இதற்கு வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.