குடியரசு தினவிழா - 'தமிழ்நாடு வாழ்க' அலங்கார ஊர்தி

 
tn

நாட்டின் 74 ஆவது குடியரசு தினம் விழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை அருகே இன்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது . ஆளுநர் ரவி , முதலமைச்சர்  மு.க .ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

tn

இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் மூவர்ண கொடியை ஆளுநர் ரவி ஏற்றி மரியாதை செலுத்தினார். அப்போது தேசியக்கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

tn

இந்நிலையில் செய்து துறை சார்பில் அலங்கார ஊர்தி வலம் வந்தது.  சுற்றுலாத்துறை ,விளையாட்டு துறை , சுகாதாரத்துறை , பள்ளி கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அலங்கார உறுதிகள் அரசு நலத்திட்டங்களை விவரிக்கும் வகையில் இடம் பெற்றிருந்தன . இது குறிப்பாக செய்தித் துறை அலங்கார ஊர்வலத்தில் தமிழ்நாடு வாழ்க என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.  அத்துடன் தமிழ்நாட்டின் பல்வேறு பாரம்பரியங்களை பறைசாற்றும் மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் கலை நிகழ்ச்சிகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சிறப்புடன் வழங்கினர்.