குடியரசு தின தேநீர் விருந்து- திமுக அமைச்சர்கள் பங்கேற்பு

 
ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து

சென்னை கிண்டியில் தேசிய கீதத்துடன் குடியரசு தின தேநீர் விருந்து தொடங்கியது.

ஆஹா.. பெரும் மாற்றம்.. ஆளுநர் மாளிகைக்கு போன முதல்வர்! தேநீர் விருந்தில்  பங்கேற்பு.. என்ன பேசினாங்க? | TN CM Stalin participates in Governor R N  Ravi on the day of ...

டியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் முக்கியப் பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.  இதில் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நீதியரசர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிமுக சார்பில் ஜெயக்குமார், பாலகங்கா பங்கேற்பு, பாஜக சார்பில் வானதி சீனிவாசன்,  கரு.நாகராஜன், பாமக சார்பில் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்நிகழ்வில் பள்ளி கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து. குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு  ஆளுநர் ரவி  விருது வழங்கினார். அணி வகுப்பில் கலந்து கொண்ட அலங்கார ஊர்திகளில் தீயணைப்புத்துறைக்கு முதலிடம்,  மருத்துவத்துறைக்கு 2 ஆம் இடம்,  விளையாட்டுத்துறைக்கு  3 ஆம் இடம் என 22  துறைகளில் 3 துறைகளை சேர்ந்த ஊர்திகளுக்கு விருது வழங்கி வாழ்த்து தெரிவித்தார் ஆளுநர் ரவி. ஆளுநரின் தேநீர் விருந்தில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் புறக்கணித்தது.