குடியரசு தினம்- சிறப்பு விருதுகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

76வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றினார். முதல்வர் மரியாதை செலுத்தினார். சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மிடுக்குடன் நடைபெற்ற அணிவகுப்பு நடைபெற்றது.
ராமநாதபுரத்தை சேர்ந்த அமீர் அம்சாவுக்கு மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருதை வழங்கிய முதலமைச்சர்.!
வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் - தீயணைப்பு வீரர் வெற்றிவேல் (சென்னை)
▪️ கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் - அமீர் அம்சா (ராமநாதபுரம்)
▪️ வேளாண் துறையின் சிறப்பு விருது - முருகவேல் (தேனி)
▪️ காந்தியடிகள் காவலர் பதக்கம் - சின்ன காமணன் (விழுப்புரம்)
▪️ சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பைகள்:
முதல் இடம் - மதுரை
2வது இடம் திருப்பூர்
3வது இடம் - திருவள்ளூர்