மேற்குவங்கத்தில் நாளை 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு
May 1, 2026, 19:43 IST1777644839766
மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளுக்கு உட்பட 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளுக்கு உட்பட 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முதற்கட்ட தேர்தல் நடத்த தொகுதிகளில் எந்த மறுவாக்குப்பதிவும் நடத்தப்படாத நிலையில்,2ம் கட்ட தேர்தல் நடத்த டைமண்ட் ஹார்பர் மக்ராஹத் பஷிம் தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாளை காலை 7 மணி முதல் 6 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2ஆம் கட்ட வாக்குப்பதின்போது வந்த புகார்கள், முறைகேடுகளை தொடர்ந்து மறுவாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

