"குண்டர் சட்டத்தை ரத்து செய்து விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும்" - ஜவாஹிருல்லா

 
tn

வேளான் நிலங்கள் பறிபோனால் வயிற்றுக்கு உணவு பறிபோகும் என்று  ஜவாஹிருல்லா என்று தெரிவித்துள்ளார்.

jawahirullah

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மா, தேத்துறை, குறும்பூர், நர்மா பள்ளம், நெடுங்கல், அத்தி, வடஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், வீரம்பாக்கம் ஆகிய 9 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 3,300 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய விளை நிலங்களை 'சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கம்' செய்ய அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.


 இதுதொடர்பாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தனது சமூக வலைத்தள பக்கத்தில், திருவண்ணாமலையில் சிப்காட் தொழில்பேட்டைக்காக வேளாண்மை நிலங்களைக் கையகப்படுத்தப்படுவதைக் எதிர்த்துப்  போராடிய 7 விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது வண்மையாகக் கண்டிக்கத்தக்கது.  

வேளான் நிலங்கள் பறிபோனால் வயிற்றுக்கு உணவு பறிபோகும். 

தமிழ்நாடு அரசு உடனடியாக குண்டர் சட்டத்தை ரத்து செய்து விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.