ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.535 கோடி பணத்துடன் சென்றுகொண்டிருந்த லாரி பழுது

 
லாரி

சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.535 கோடி பணத்துடன் விழுப்புரம் நோக்கி சென்ற வாகனம் தாம்பரம் சானிடோரியத்தில் பழுது ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ரூ.535 கோடி பணத்துடன் நடுவழியில் நின்ற லாரி... தாம்பரம் அருகே பரபரப்பு

சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து விழுப்புரம் வங்கிகளுக்கு பணம் எடுத்துச் செல்லப்பட்டது. தாம்பரம் அருகே வாகனம் பழுதானதால் சித்த மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டுள்ளது. வாகனத்தை சரி செய்யும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இருப்பினும் வாகனம் சரி செய்யப்படாததால் சென்னையில் இரண்டு வாகனங்களும் சென்னை ரிசர்வ் வங்கிக்கு திருப்பி அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பழுதான வாகனத்தை மட்டும் கட்டி இழுத்து செல்வதற்கு மேலும் ஒரு வாகனம் வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடன் கட்டி இழுத்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லும் ஏற்பாடுகளை வங்கி பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். ரூ. 535 கோடி பணத்துடன் வாகனம் பழுதானதால் உடனடியாக அருகில் உள்ள குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தாம்பரம் உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திடீரென பழுதான வாகனத்திற்கு அதிகப்படியான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதால் அப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது. இதுகுறித்து வாகன ஓட்டுனரிடம் கேட்ட பொழுது இது வழக்கமான நடைமுறைதான் இருப்பினும் திடீரென வாகனத்தின் ஒரு வாகனத்தில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.