மூடப்பட்ட மதுக்கடைகள் திறப்பு- மக்கள் அதிர்ச்சி
ஈரோட்டில் மூடப்பட்ட எலைட் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மதவழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையங்கள் அருகில் உள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டார். பொதுமக்களின் வேண்டுகோள் மற்றும் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அண்மையில் எந்த பகுதிகளில் எங்கெங்கு உள்ள கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன என்ற பட்டியலையும் தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மூடப்பட்ட 5 எலைட் மதுபான கடைகள் முன்னறிவிப்பின்றி மீண்டும் திறக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 20 நாட்களாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபானக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெறுகிறது. மேலிட உத்தரவால் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலிட உத்தரவால் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதாக அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர். மூடப்பட்ட மதுக்கடைகளை சத்தமில்லாமலும், பெயர் பலகை இல்லாமலும் மீண்டும் திறந்ததற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

