பிரபல பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

 
பிரபல பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

பிரபல பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லே (92) மாரடைப்பால் காலமானார்.

s

இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் தங்கையும் பிரபல பின்னணி பாடகியுமான ஆஷா போஸ்லே காலமானார். அவருக்கு வயது 92.  சனிக்கிழமை மாரடைப்பு மற்றும் நுரையீரல் கோளாறு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தனது 10 வயதில் பாடத் தொடங்கிய ஆஷா போஸ்லே 10 ஆயிரத்துக்கும் மேல் பாடல்களை பாடியுள்ளார். தமிழில், 'ஓ பட்டர்ஃப்ளை', 'நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி', 'செண்பகமே செண்பகமே', செப்டமர் மாதம், செப்டம்பர் மாதம் போன்ற பல பாடல்களைப் பாடியுள்ளார். தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார்.

பாடகி ஆஷா போஸ்லேவின் இறுதி நிகழ்வுகள் திங்கட்கிழமை மும்பை சிவாஜி பார்க் பகுதியில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர். மகன் ஆனந்த் போஸ்லே கூறுகையில், “ஆஷா இன்று மறைந்தார். இறுதி அஞ்சலி செலுத்த விரும்புவோர் நாளை காலை 11 மணிக்கு இல்லத்திற்கு வரலாம். மாலை 4 மணிக்கு இறுதி சடங்கு நடைபெறும்” என தெரிவித்துள்ளார். தமிழ், இந்தி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார் ஆஷா போஸ்லே. திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.