பிரபல உருது கவிஞரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பஷீர் பதர் காலமானார்..!!

 
Q
பிரபல உருது கவிஞரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான டாக்டர் பஷீர் பதர் காலமானார். அவருக்கு வயது 91.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மதியம் 12:15 மணியளவில் காலமானார்.
நவீன உருது கவிதை மற்றும் கஜல் வகை பாடல்களில் பஷீர் பதர் ஆற்றிய பங்கு அளப்பரியது. சாமானியர்களும் புரிந்து கொள்ளும் எளிய சொற்களில் ஆழமான காதல் மற்றும் தத்துவ வரிகளை பஷீர் வடித்துள்ளார்.
7க்கும் மேற்பட்ட உருது கவிதைத் தொகுப்புகள் மற்றும் 18,000-க்கும் அதிகமான Couplets என்ற ஒரு வகை கவிதை வரிகளை அவர் எழுதியுள்ளார்.
1987 மீரட் கலவரத்தில் இவரது வீடு எரிக்கப்பட்டு, அச்சிடப்படுவதற்கு முன்பே பல படைப்புகள் சாம்பலாகின.
அதன் பின்னரே இவர் போபாலுக்குக் குடிபெயர்ந்தார். இந்தத் துயரமே இவரது கவிதைகளில் சோக உணர்வாக வெளிப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக டிமென்ஷியா எனும் நினைவாற்றல் இழப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த பஷீர்,தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களைக் கூட அடையாளம் காண முடியாத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரின் மறைவு இலக்கிய வாசகர்கர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது