#BREAKING பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்
Updated: Oct 25, 2026, 10:21 IST1792903905720
பிரபல சமையல் கலை நிபுணர் செஃப் தாமு (72) சென்னையில் காலமானார்.
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.2010ஆம் ஆண்டு, 24 மணி நேரம் 30 நிமிடங்கள் 12 வினாடிகளில் 617 விதமான உணவு வகைகளைத் தயாரித்து கின்னஸ் உலக சாதனை படைத்தார். சமையல் கலையில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்காக பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவர், திரைப்படங்களில் சிறப்புத் தோற்றங்கள் என பல்துறை செயற்பாட்டாளராக தாமு திகழ்ந்தார். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

