'ரெனால்ட் குழுமம் – முதல்வர் விஜய் ஆலோசனை!' – தலைமை செயலகத்தில் முக்கிய சந்திப்பு!

 
1

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (19.11.2026) தலைமைச் செயலகத்தில் பிரான்ஸ் நாட்டின் ரெனால்ட் குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பில் ரெனால்ட் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் திரு. ஃபிரான்சுவா புரோவோஸ்ட், தலைமை வளர்ச்சி அலுவலர் திரு. ஃபேப்ரிஸ் காம்போலிவ், இந்தியாவிற்கான தலைமைச் செயல் அலுவலர் திரு. ஸ்டீஃபன் டெப்லைஸ், தகவல் தொடர்பு, ஊடக உறவுகள் மற்றும் பொது விவகாரங்கள் துணைத் தலைவர் செல்வி ஹம்சா திர், பெருநிறுவன விவகாரங்கள் பொது மேலாளர் திரு. நரசிம்மன் புருஷோத்தமன் ஆகியோர் பங்கேற்றனர்.

இச்சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் ரெனால்ட் குழுமம் தனது முதலீட்டைத் தொடர்ந்து அதிகரித்திட வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்து தரும் என்றும் அவர் தெரிவித்தார்.