கொரோனா தடுப்பூசிகளுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு தேவை – தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்

 

கொரோனா தடுப்பூசிகளுக்கு  ஜி.எஸ்.டி. விலக்கு தேவை – தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்

43 வது ஜிஎஸ்டி கூட்டத்தில் கொரோனா தடுப்பூசிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு தேவை என மத்திய நிதியமைச்சர் நிர்மல சீதாராமனிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பூசிகளுக்கு  ஜி.எஸ்.டி. விலக்கு தேவை – தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்

கோவிட் தொற்றால் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொற்றைக் கட்டுப்படுத்தத் தேவையான தடுப்பூசிகளையும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகளையும் மாநில அரசுகள் கொள்முதல் செய்து வருகின்றன. இதனைக் கருத்தில்கொண்டு, ஜிஎஸ்டி கவுன்சிலோடு கலந்தாலோசித்து, இந்தப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறிப்பிட்ட காலத்திற்கு பூஜ்ய சதவிகிதம் என நிர்ணயிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களும் வலியுறுத்திவருகின்றன.

இந்நிலையில் ஜிஎஸ்டி கூட்டத்தில் பேசிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “ஜிஸ்டி வரியை அவசர கதியில் செயல்படுத்தியதால் அடிப்படை குறைபாடு உள்ளது. ஜிஎஸ்டி வரியின் வடிவமைப்பு, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு ஏற்றதாக இல்லை. மாநில அரசுகள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவை தொகையை பெற மத்திய அரசிடம் போராட வேண்டி இருக்கிறது” எனக் கூறினார்.