திமுகவின் கோரிக்கைக்கு செவிக்கொடுத்த ஆளுநர்! சாலையில் போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றம்

 
திமுகவின் கோரிக்கைக்கு செவிக்கொடுத்த ஆளுநர்! சாலையில் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றம்

புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன் போடபட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகள் அகற்றப்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல திறந்து விடபட்டது. ஐந்து வருடங்களாக மூடப்பட்டிருந்த சாலை, எதிர்க்கட்சி தலைவர் சிவா கோரிக்கையை ஏற்று, ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டார்.

விடுவிக்கப்பட்ட சாலைகள்

புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் துணை நிலை ஆளுநருக்கு அப்போதைய காங்கிரஸ் அரசிற்கும் மோதல் போக்கு ஏற்பட்டது. அவ்வப்போது ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டங்கள் நடைபெற்றது. அதனால் ஆளுநர் மாளிகைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருபுறமும் தடுப்பு கட்டைகள் அமைத்து பாதுகாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஐந்து வருடங்களாக மூடப்பட்டிருந்த சாலை தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன்பு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆளுநர் மாளிகையின் சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் சாலைகளை தடுத்து பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டது. அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் தற்போது பாதுகாப்பு தடுப்புகளை ஆளுநர் மாளிகை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.