அஜித் ரேஸிங் அணியுடன் ரிலையன்ஸ் குழுமம் ஒப்பந்தம்
அஜித் குமார் ரேஸிங் அணியுடன் ரிலையன்ஸ் குழுமம் ஒப்பந்தம் செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். நடிப்பு மட்டுமல்லாமல், ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்கிறார். குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார் அஜித்குமார். அஜித்குமார் ரேஸிங் என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கினார் அஜித். அவருடைய அணி ஐரோப்பிய கார் பந்தய போட்டியில் பங்கேற்றது. துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் ரிலையன்ஸ் குழுமத்தின் ‘கேம்பா’ குளிர்பான நிறுவனம், ‘அஜித்குமார் ரேஸிங்’ அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக ஒப்பந்தம் செய்து. இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் அணிகளில் ஒன்றான அஜித்குமார் ரேஸிங் என ரிலையன்ஸ் குழுமம் இந்த ஒப்பந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


