தமிழகத்திற்கு ரூ.7,057.89 கோடி விடுவிப்பு
![ஜூலை மாத GST மூலம் இந்திய அரசுக்கு வருவாய் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் தெரியுமா?](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/migrated/a8e9b9305ee6d4c280a7c74032833fc9.jpg)
மாநில அரசுகளுக்கு வரிப் பகிர்வு தொகையாக ரூ.1,73,030 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இந்த நிதி 2024-ம் ஆண்டு டிசம்பரில் ரூ.89,086 கோடியாக இருந்தது.
அதன்படி தமிழகத்திற்கு ரூ.7,057 கோடி விடுவிப்பு மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த செலவினங்களுக்காக, இம்மாதம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது ஜனவரி மாத பங்காகும். மாநிலங்களுக்கு கடந்த மாதம் ரூ.89,086 கோடி தரப்பட்ட நிலையில், இம்மாத நிதியாக ரூ.7,057 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மூலதன செலவினங்களை விரைவுபடுத்தவும், மேம்பாடு, நலத்திட்டங்கள் தொடர்பான செலவினங்களுக்கு நிதியளிக்கவும் மாநிலங்களுக்கு இந்த மாதம் கூடுதல் தொகை பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு ரூ.31,039.84 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்திற்கு ரூ.17,403.36 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.