காதல் திருமணம் செய்த பெண்ணை காரில் கடத்தி சென்ற உறவினர்கள்

 
s

எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணை அவரது உறவினர்கள் அடியாட்களுடன் பட்டப் பகலில் வீட்டில் நுழைந்து கத்தி முனையில் பெண்ணை காரில் தூக்கிச் சென்ற காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

எடப்பாடி | காதல் திருமணம் செய்த பெண் கடத்தல்/salem | Relatives kidnapped  the woman who got love married 7 month before at knife point in Edappadi

சேலம் மாவட்டம் எடப்பாடி செட்டிமாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தனுஷ்கண்டன், மற்றும் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த ரோஷினி,இருவரும் ஓசூரில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்த போது பழக்கம் ஏற்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதற்கு இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர் கடந்த ஆண்டு ஜூலை 4-ம்தேதி எடப்பாடி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு ஆஜராகி உள்ளனர் அது சம்பந்தமாக எடப்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பெண்ணின் பெற்றோர்கள் வர மறுத்தால் இருவரும் மேஜர் என்பதால் தனுஷ்கண்டன், குடும்பத்தினருடன் இருவரையும் அனுப்பி வைக்கப்பட்டது.


இந்த நிலையில் இன்று மாலை ரோஷினியின் உறவினர்கள் ஒரு காரில் வந்து வேக வேகமாக இறங்கி கத்தி அருவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தனுஷ்கண்டன் வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து மிரட்டி மின்னல் வேகத்தில் ரோஷினியை காரில் தூக்கிக் கொண்டு பறந்தக்கார் அவ்வழியாக சாலையை கடக்கும் போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது இடித்து தூக்கி வீசிவிட்டு நிற்காமல் புயல் வேகத்தில் பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கடத்திச் சென்ற ரோஷினி மற்றும் அவரது உறவினர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருவதோடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பட்டப் பகலில் அருவா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடு புகுந்து பெண்ணை கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.