" ஜாபர் சாதிக் உடன் திரைப்பிரபலங்களுக்கு தொடர்பு" - என்.சி.பி. அதிகாரி பேட்டி!!

 
tn

ராஜஸ்தானில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். தமிழ்நாடு திரைத்துறை சார்ந்த பிரபலங்களுக்கும் தொடர்பிருப்பதாக ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார். விசாரணைக்கு பிறகு, இதில் தொடர்புடைய திரைப்பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்படும்; அரசியல், திரைத்துறை, கட்டுமானத்துறை உள்ள முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு என ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளார். பாலிவுட் திரைத்துறையினருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குநர் ஞானேஷ்வர் தெரிவித்துள்ளார். 

tn

தொடர்ந்து பேசிய அவர் , “போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை சினிமா, கட்டுமான தொழிலில் முதலீடு செய்ததாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார். ஜாபர் சாதிக் 3 ஆண்டுகளில் 3,500 கிலோ போதைப்பொருட்களை கடத்தியுள்ளார்; குற்றம் நிரூபிக்கப்பட்டால் மதம், இனம், மொழி, கட்சி கடந்து ஜாபர் சாதிக் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஜாபர் சாதிக் அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளித்தாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்..  ஜாபர் சாதிக் மீது 2019-ல் மும்பை சுங்கத்துறையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக வழக்கு உள்ளது; ஜாபர் சாதிக்கிற்கு பல்வேறு பெரும் புள்ளிகளுடன் தொடர்புள்ளது என்றார்.