திருமணமான ஆணுடன் உறவு - கண்டித்த தந்தையை கொலை செய்த மகள்

 
tn

திருமணமான ஆணுடன் உறவு வைத்திருந்த மகளை தந்தை கண்டித்ததால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

murder

கன்னியாகுமரி பூதப்பாண்டி அருகே திருமணமான 40 வயது ஆணுடன் தொடர்பில் இருந்த 21 வயது மகளை  தந்தை கண்டித்தால் ஆண் நண்பருடன் சேர்ந்து தனது தந்தையை மகள் கொலை செய்துள்ளார். திருமணமாகி மனைவி, 3 பிள்ளைகளுடன் இருக்கும் சுரேஷ் பாபு (40) என்பவருடன் பழகுவதை கண்டித்த தந்தை சுரேஷ்குமாருக்கு மது ஊற்றிக் கொடுத்து மகள் ஆர்த்தியும், சுரேஷ் பாபுவும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

murder

மது போதையில் தந்தை உயிரிழந்ததாக நாடகம் ஆடிய மகள் ஆர்த்தி மற்றும் சுரேஷ்பாபுவை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகிறது.