நேற்று ஒரே நாளில் பதிவுத்துறை மூலம் அரசுக்கு ரூ.168.83 கோடி வருவாய்
பதிவுத்துறையின் ஆவண பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாம தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தை பொங்கலுக்கு பின்வரும் நாட்களில் பதிவுத்துறையில் அதிக பதிவுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் 31.01.2024 வரை அனைத்து வேலை நாட்களிலும் கூடுதலான டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் நேற்றையதினம் மட்டும் அதாவது 22.01.2024 அன்று மட்டும் 21,004 ஆவணங்கள் பதியப்பட்டு அதன் மூலம் அரசுக்கு 168.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.
பதிவுத்துறையின் ஆவண பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்தது வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தகவல்#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @pmoorthy21 pic.twitter.com/em2Xci0GbL
— TN DIPR (@TNDIPRNEWS) January 23, 2024
புதிய கூட்டு மதிப்பின் அடிப்படையின் கீழ் 22.01.2024 அன்று சென்னையில் பதியப்பட்ட 137 அடுக்குமாடி குடியிருப்பு பதிவுகளும் அதன்மூலம் பெறப்பட்ட ரூபாய் 12 கோடி வருவாயும் இதில் அடங்கும். இனி வரும் நாட்களிலும் எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.