"விஜய் சார் வந்ததுக்கு அப்பறோம் தான் அரசியலில் புதிய அலை உருவாகி இருக்கு.." - நடிகை ரெஜினா
விஜய் சார் அரசியலுக்கு வந்த பிறகு ஒரு புதிய அலையை உருவாக்கியிருக்கிறார் என்று நினைக்கிறேன், அது உண்மையிலேயே அற்புதம் என நடிகை ரெஜினா கசாண்ட்ரா தெரிவித்துள்ளார்.

‘மூக்குத்தி அம்மன் 2’ டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு பின்னர் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரெஜினா கசாண்ட்ரா, "வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பது புதிதாக உள்ளது நன்றாக இருக்கிறது. படம் வெளியாவதற்காகக் காத்திருக்கிறேன். ரூ.100 கோடி படத்தைத் தனது தோளில் சுமந்து நயன்தாரா நடித்துள்ளார். வேறு எந்தப் பெண்ணாலும் இதைச் செய்ய முடியாது. இது எனக்கு ஊக்கமளிக்கிறது. மூக்குத்தி அம்மன் படம் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களாக வெளியாகும். படத்தில் நயன்தாராவுக்கும் எனக்கும் ஒரு Face Off உள்ளது... அவர் எனக்கு பெரிய Inspiration-ஆக உள்ளார். விஜய் சார் அரசியலுக்கு வந்த பிறகு ஒரு புதிய அலையை உருவாக்கியிருக்கிறார் என்று நினைக்கிறேன், அது உண்மையிலேயே அற்புதம்" என்றார்.

