தூய்மைப் பணியாளர்களை பேருந்தில் ஏற்ற மறுப்பு- நடத்துநர் பணியிடமாற்றம்

 
தூய்மை பணியாளர்கள்

தஞ்சையில் தூய்மைப் பணியாளர்களை பேருந்தில் ஏற்ற மறுத்ததாக புகார் எழுந்த விவகாரத்தில் அரசுப்பேருந்தின் நடத்துநர் யேசுதாஸ், மாற்று நடவடிக்கை எடுக்காத நேர காப்பாளர் ராஜா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை பேருந்தில் ஏறியுள்ளனர். உடனே அவர்களிடம் நடத்துனர் யேசுதாஸ், “காலையிலேயே ஓசி பஸ்ஸூல பயணமா?” என கிண்டலாக கேட்டதுடன் பேருந்தில் இருந்து பாதியில் இறக்கிவிட்டார். உடனே நடத்துனர் அவமதித்ததாக கூறி பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், அனைவரையும் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் அரசு பேருந்து நடத்துனர் யேசுதாஸ், பேருந்து நிலைய டைம் கீப்பர் ராஜா ஆகிய இருவரையும் பணியிடம் மாற்றம் செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.