ரயில் தண்டவாளத்தில் ரீல்ஸ்.. உடல் சிதறி சிறுவன் பலி..!

 
1 1

ரீல்ஸ் மோகத்தால் ரயிலுக்கு முன் வீடியோ எடுத்த சிறுவன் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் குறித்த பதறவைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 

சிறுவன் தனது தாயுடன் தட்சினகாளி கோவிலுக்கு தரிசனத்துக்காக சென்றார். அப்போது அந்த கோவில் அருகே ஜனகேதெய்ப்பூர்வ ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ஸ்டேஷன் அருகே இரும்பு மேம்பாலத்தில் ரயில் செல்லும். இது பார்க்க அழகாக இருக்கும். இதனால் அந்த இரும்பு மேம்பாலத்தின் மீது ஏறி ரயில் வரும்போது ரீல்ஸ் எடுக்க சிறுவன் முடிவு செய்தார்.

அதன்படி அவர் மேம்பாலத்தில் நின்றார். பின்னால் ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. சிறுவனை பார்த்தவுடன் ரயில் இன்ஜின் டிரைவர் ‛ஹாரன்' அடித்தார். ஆனால் சிறுவன் ரயில் தண்டவாளத்தை ஒட்டியே நின்றார். கையில் செல்போன் வைத்து கொண்டு ரயில் முன்பு ரீல்ஸ் செய்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த ரயில் சிறுவன் மீது மோதியது. இதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டு இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் ரயில்வே அதிகாரிகள், ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது சிறுவன் ரீல்ஸ் எடுக்க முயன்றதும், அப்போது ரயில் அவன் மீது மோதியது தொடர்பான வீடியோ வெளியாகி அனைவரையும் பதற வைத்துள்ளது. தற்போது பலியான சிறுவனுக்கு அவரது குடும்பத்தினர் பலமுறை அறிவுரை வழங்கி உள்ளனர். ஆபத்தான இடங்களில் ரீல்ஸ் எடுக்க வேண்டாம் என்று தொடர்ந்து கூறியுள்ளனர். ஆனால் அவர் கேட்கவில்லை. அதேபோல் தற்போது சிறுவன் ரீல்ஸ் எடுத்த இடத்திலும் ரயில்வே சார்பில் ஆபத்தான பகுதி என்று வார்னிங் செய்யப்பட்டு இருந்தது. அதனையும் மீறி அந்த சிறுவன் ரீல்ஸ் எடுப்பதற்காக சென்று உயிரை பறிகொடுத்துள்ளார். அவர் ரயில்வேயின் ரூல்ஸை மதித்து நடந்திருந்தால் இன்று அவர் உயிருடன் இருந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.