ரீல்ஸ் மோகம்..! 300 அடி கீழே விழுந்த இன்ஸ்டா பிரபலம் ஆன்வி கம்தார் காலமானார்..!

 
1

சமூக வலைதளத்தில் அதிகமான லைக்குகள் கிடைப்பதால் பலர் ஆர்வமுடன் ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார்கள்.
சினிமா பாடலுக்கு நடனமாடுவது,  சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளை தத்ரூபமாக நடித்து ரீல்ஸ் வெளியிடுவது உள்பட புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.  அதே நேரத்தில் சிலர் ரீல்ஸ்காக உயிரைப் பணயம் வைக்கிறார்கள். அதில் சிலர் இறக்கவும் செய்கின்றனர். அது போல் ஒரு சம்பவம் மும்பையில் நடைபெற்றுள்ளது. 

மும்பையை சேர்ந்தவர் ஆன்வி கம்தார் 27 வயதான இவர் தனது 7 நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்காக  ராய்காட் மாவட்டத்தில் உள்ள மங்கானில் உள்ள புகழ்பெற்ற கும்பே நீர்வீழ்ச்சிக்கு வந்துள்ளார்.அப்போது  300 அடி ஆழமான பள்ளத்தாக்கில் வீடியோ எடுக்கும் போது எதிர்பாரா விதமாக தவறி விழுந்துள்ளார்.

மங்கான் காவல் நிலைய அதிகாரி கூறுகையில், மும்பையின் முலுண்ட் பகுதியைச் சேர்ந்த கம்தார், மழைக்கு மத்தியில் தனது நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்காக அழகிய நீர்வீழ்ச்சிக்கு வந்துள்ளார்.இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுப்புறத்தை வீடியோ எடுக்கும் போது, ​​அவள் தவறி பள்ளத்தாக்கில் விழுந்தாள், என்றார்.

அவரது நண்பர்கள் கொடுத்த தகவலின் பெயரில், போலீசார் மற்றும் உள்ளூர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து, ஆன்வி கம்தாரை மீட்டு அருகில் உள்ள மாங்கன் தாலுகா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார் என அந்த அதிகாரி கூறினார்.