"ரீல் கட் ஆகிவிடும்": எ.வ.வேலுவின் சைகை பேச்சுக்கு சிரித்த முதல்வர்..!

 
1

குற்றச்சாட்டு சொல்லுகிற போது உடனே எங்கள பேச அனுமதிங்க.. நீங்க சொல்றதுகுள்ள ரீல் கட் மேல போய்டுது.. Reel.. Reel... எ.வ.வேலு பேச பேச CM விஜய் கொடுத்த ரியாக்‌ஷன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும்போது அதற்கு பதிலளிக்க தங்களுக்கு பேச அனுமதி அளித்தால்தான் நேரலை ஒளிபரப்பில் சரியாக இருக்கும் என்றும், இல்லையெனில் ரீல் ரீல் என கட் ஆகி மேலே போய் விடுகிறது என சைகையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். இதனை அவையிலிருந்த முதலமைச்சர் சிரித்த முகத்துடன் பார்த்து ரசித்தார். இதனால் பேரவையில் நிலவிய காரசாரமான சூழல் தணிந்து சிறிது நேரம் கலகலப்பான சூழல் உருவானது.