பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - ஜி.கே.வாசன் வரவேற்பு

 
gk vasan

மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 2 ரூபாயைக் குறைத்திருப்பது பாராட்டுக்குரியது, நன்றிக்குரியது என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 2 ரூபாயைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது.

gk
பெட்ரோல், டீசல் விலை குறைப்பானது லிட்டருக்கு 2 ரூபாய் என்றாலும் அது சாதாரண மக்கள் மீதுள்ள பணச்சுமையைக் குறைக்க உதவும். அது மட்டுமல்ல வாகனங்களுக்கு பெட்ரோல், டீசலைப் பயன்படுத்தும் விவசாயிகள் உள்ளிட்ட சாமானிய மக்கள் பணத்தைச் சேமிக்கவும் உதவும்.

GK Vasan

மேலும் போக்குவரத்தில் பெட்ரோல், டீசலைப் பயன்படுத்துவதால் சரக்கு உள்ளிட்ட போக்குவரத்தில் ஏற்படும் செலவீனம் குறையும்.பொதுவாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசலைப் பயன்படுத்தும் அனைத்து தரப்பு மக்களும் பயனடைவார்கள். குறிப்பாக நாடு முழுவதும் எவ்வித பாகுபாடின்றி பெட்ரொல், டீசல் விலை குறைப்பானது நாட்டு மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட நல்ல முடிவாகும். மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்ட அரசாக செயல்படுவதை நிரூபிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருப்பதால் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை பாராட்டி, வாழ்த்தி, நன்றி கூறுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.