MGR Film city-யில் சினிமா சூட்டிங்கிற்கான அரங்க வாடகை கட்டணங்கள் குறைப்பு!
MGR Film city-யில் சினிமா சூட்டிங்கிற்கான அரங்க வாடகை கட்டணங்களை குறைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன வளாகத்தினுள் தனியார் நிறுவனங்களால் அரசு அனுமதியுடன் நடத்தப்படும் படப்பிடிப்புகளுக்கான கட்டண விகிதங்களை குறைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் தலைமையில் 17.07.2026 அன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில் திரைப்பட படைப்பாக்க வளாகத்தில் அமையப் பெற்றுள்ள 3c Studios(Grid-1, Grid-2 & Grid-3) மற்றும் புனரமைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட படப்பிடிப்பு தளங்களுக்கு அதிக அளவில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்ட காரணத்தால், குறைந்த அளவிலான படப்பிடிப்புகள் நடைபெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து, மேற்கண்ட படப்பிடிப்பு தளங்களின் கட்டண விகிதங்களை சந்தை விலைக்கேற்ப நிர்ணயம் செய்திட ஏதுவாக 21.07.2026 அன்று இயக்குநர்/ கூடுதல் செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ள படப்பிடிப்பு தளங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டண விகிதங்களை பாதியாக குறைத்து நிர்ணயிக்குமாறு தயாரிப்பாளர் சங்கத்தினரால் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து,தயாரிப்பாளர் சங்கத்தினரின் வேண்டுகோளை ஏற்று தற்போதைய படப்பிடிப்பு தளங்களுக்கான கட்டண விகிதங்களில் 50% குறைப்பு பரிசீலிக்கப்பட்டடுள்ளது. தன்படி மூன்று புதிய படிப்பிடிப்பு தளங்களுக்கும், புனரமைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட படப்பிடிப்பு தளத்திற்கும் கட்டணங்களை 50% ஆக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளங்களை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பொருட்டு தயாரிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கையினை ஏற்கும் வகையிலும், படப்பிடிப்பு கட்டணங்களை மறுநிர்ணயம் செய்தும், சில இனங்களுக்கு கட்டணங்களை நிர்ணயம் செய்தும், பிற இனங்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள அரசாணையின்படி நிர்ணயிக்கப்பட்ட தொகையே (வரிகள் உட்பட) பொருந்தும். அரசின் பரிசீலனைக்குப் பின்னர், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மூன்று படப்பிடிப்பு தளங்கள் மற்றும் புனரமைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட படப்பிடிப்புத் தளம் ஆகியவற்றுக்கான கட்டண விகிதங்களை 50% குறைப்பு செய்து, சில இனங்களுக்கு கட்டணங்களை நிர்ணயம் செய்து பின்வருமாறு கட்டணங்களை நிர்ணயம் செய்து அரசு ஆணையிடுகிறது

