அடுக்கு மாடி குடியிருப்பில் மின்சார கட்டண குறைவு இன்று முதல் அமல்!
Nov 1, 2023, 07:34 IST1698804242235

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மாதம் ஒரு முறை மின் கட்டணம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு 6,000 ரூபாய் அளவுக்கு மின் கட்டணம் குறையும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப் பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தை ஒரு யூனிட்டிற்கு 8 ரூபாய் என நிர்ணயம் செய்தது.
பின்னர் குடியிருப்பு பொதுப் பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தை 8 ரூபாயிலிருந்து 5.50 ரூபாயாக சில நிபந்தனைளுடன் தி.மு.க. அரசு குறைத்தது. தமிழ்நாட்டில் 10 வீடுகளுக்கும், 3 மாடிகளுக்கும் குறைவாக உள்ள, மின் தூக்கி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொதுப்பயன்பாட்டு மின்கட்டணம் ஓர் அலகுக்கு 8 ரூபாயிலிருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.