செஞ்சி மஸ்தான் விடுவிப்பு... பொன்முடி மகனுக்கு முக்கிய பொறுப்பு!!

 
Masthan

விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக, அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

minister senji masthan tn assembly

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் நியமனம் - விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வரும் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக டாக்டர் ப.சேகர், (28, ஜெயபுரம் 2வது தெரு, திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம் – 604 001) அவர்கள் விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

rr

அத்துடன் மற்றொரு அறிக்கையில், விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வந்த நா.புகழேந்தி அவர்கள் மறைவெய்திய காரணத்தால் கழகப் பணிகள் செவ்வனே நடைபெற டாக்டர் தெ.கௌதம்சிகாமணி, எம்.எஸ். (ஆர்த்தோ) அவர்கள் விழுப்புரம் தெற்கு நியமிக்கப்படுகிறார். மாவட்டக் கழகப் பொறுப்பாளராக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.