‘சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய பேச்சில் எங்களுக்கு உடன்பாடு இல்லை! மன்னிச்சிடுங்க’- ரெட்பிக்ஸ்

 
ரெட் பிக்ஸ் மன்னிப்பு

ரெட் பிக்ஸ் யூட்யூப்  சேனலுக்கு சமீபத்தில் பேட்டி அளித்த சவுக்கு சங்கர் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவல்துறையினர் குறித்து அவதூறாக கருத்துக்களை தெரிவித்தார். இது தொடர்பாக கோவையை சேர்ந்த காவலர் சுகன்யா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து கடந்த 4ம் தேதி தேனி அருகே பழனி செட்டிப்பட்டி யில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர்.  

Image

இந்நிலையில் காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து சவுக்கு சங்கரின் கருத்துதானே தவிர ரெட் பிக்ஸ் ஊடகத்தின் கருத்து அல்ல. அந்த சர்ச்சைக்குரிய கருத்து காவல் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அந்த காணொளியை ஒளிபரப்பியதற்காக ரெட் பிக்ஸ் ஊடகம் மனம் திறந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது என்று ரெட் பிக்ஸ் ஊடகத்தின் பொது மேலாளரும், ஃபெலிக்ஸ் ஜெரால்டின் மனைவியுமான ஜேன் ஃபெலிக்ஸ் கூறியுள்ளார்.

பெண் காவலர்கள் குறித்த நேர்காணல்: பகிரங்க மன்னிப்பு கோரிய 'ரெட் பிக்ஸ்'  யூடியூப் சேனல் | RedPix media has apologized for airing an interview about  Women Police - hindutamil.in


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “கடந்த 30.04.2024 அன்று Why Savukku Media is Targeted? என்ற தலைப்பில் ரெட் பிக்ஸ் ஊடகத்தின் ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு, சவுக்கு சங்கரை நேர்காணல் செய்தார். தமிழக காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து சவுக்கு சங்கரின் கருத்துதானே தவிர ரெட் பிக்ஸ் ஊடகத்தின் கருத்து அல்ல. பெண்களின் மாண்பையும், சுயமரியாதையையும் மிக உயர்வாக ரெட் பிக்ஸ் ஊடகம் கருதுகிறது. சவுக்கு சங்கர் பேசிய அந்த சர்ச்சைக்குரிய கருத்து காவல் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அந்தக் காணொளியை ஒளிபரப்பியதற்காக ரெட் பிக்ஸ் ஊடகம் மனம் திறந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது. சர்ச்சைக்குரிய அந்த காணொளி, வழக்கு நிலுவையில் உள்ளதாலும், காவல் துறை விசாரணைக்கு தேவைப்படுவதாலும் வேறு யாரும் பார்க்காத வண்ணம் ‘பிரைவட்’ (Private) செய்யப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது