வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! – கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

 
1

கேரளாவில் வயநாடு மாவட்டம், மேப்பாடி அருகில் கல்லாடியில் மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அனக்கோம்பயில், மேப்பாடி சுரங்கப்பாதை சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

.பணிகள் ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் சூழலில், அங்கு மீனாட்சி பாலம் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுரங்கப்பணிகளில் ஈடுபட்டவர்கள், அங்கு வசிப்போர் என பலர் சிக்கினர். அவர்களை மீட்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருக்கக்கூடும் என்பதால் மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் வேகம் எடுத்துள்ளன.

இந்நிலையில், வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. ரெட் அலர்ட் எதிரொலியாக அங்குள்ள குவாரிகள், சுற்றுலா மையங்களை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முன் எச்சரிக்கையாக கல்வி நிறுவனங்களுக்கும் தற்காலிக விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.