#BREAKING தமிழ்நாட்டுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை

 
rain

இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் 21 செ.மீ.-க்கு மேல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தி.மலை, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, விருதுநகர், குமரியில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, வடலூரில்  இடி மின்னலுடன்  கனமழை பெய்துவருவதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முழுவதும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.