மீண்டும் மீண்டும் வரலாறு காணாத உயர்வு: ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை நெருங்கி புதிய உச்சம்..!!
Oct 15, 2025, 09:53 IST1760502220176
இன்று (அக் 15) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.94,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,860க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் ரூ.207க்கு விற்பனை ஆகிறது.
இம்மாதம், 1ம் தேதி தங்கம் சவரன், 87,600 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த இரு வாரங்களில் மட்டும் சவரனுக்கு எப்போதும் இல்லாத வகையில், 7,280 ரூபாய் அதிகரித்துள்ளது.


