வேளாண் தொழிலாக காளான் வளர்ப்பு அங்கீகரிப்பு

 
assembly

காளான் வளர்ப்பை வேளாண் சாகுபடியின் கீழ்  கொண்டு வந்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடப்பட்டுள்ளது.

குழந்தையில்லாத பெண்களுக்கு காளான் சிறந்த உணவு!

மத்திய, மாநில, வேளாண், வேளாண் சார் அமைப்புகள் நடத்திய ஆய்வில், காளான் வகைகள் காய்கறிகளுடன் ஒப்பிட்டுள்ளன. இந்நிலையில், காளான் வளர்ப்பை வேளாண் சாகுபடியின் கீழ்  கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள், காளான் வளர்ப்போர் சங்கங்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். இந்த  கோரிக்கையை ஏற்று காளான் வளர்ப்பை வேளாண் சாகுபடியின் கீழ்  கொண்டு வந்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் வெள்ளை மொட்டுக் காளான், பால் காளான், சிப்பிக் காளான் போன்ற காளான் வகைகளில் வேளாண் சாகுபடியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாட்டில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, உண்ணக்கூடிய காளான் வகைகளின் வளர்ப்பு வேளாண் செயல்பாடாக அறிவிக்கப்பட்டடுள்ளது. நிலமற்ற விவசாயிகளும் காளான் வளர்ப்பில் ஈடுபட்டிருப்பதை கருத்தில் கொண்டு  வெள்ளை மொட்டுக் காளான் வகைகளின் வளர்ப்பினை தமிழ்நாட்டில் வேளாண் தொழிலாக கருதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.