"தல தோனிக்கு விசில் போட ரெடியா" - நாளை சிஎஸ்கே டிக்கெட் விற்பனை..!

 
1

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. 

நடப்பு ஐபிஎல்லில் சென்னையில் சிஎஸ்கே அணி விளையாடவுள்ள அனைத்து போட்டிக்களுக்கான டிக்கெட்டுகளும் ஆன்லைனில் மட்டுமே விற்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில்,சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 8ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி மாலை 7.30 மணிக்கு துவங்க உள்ளது. 

மேலும் இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் வரும் 5ம் தேதி காலை 9.30 மணி முதல் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.காலை 9.30 மணிக்கு PAYTM மற்றும் insider.in தளத்தில் டிக்கெட்களை வாங்கலாம் என சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது 

டிக்கெட் விலை குறைந்த பட்சம் ரூ.1700 முதல் அதிகபட்சம் ரூ.6000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

லோயர் சி, டி, இ இருக்கைகளுக்கு ரூ.1700, அப்பர் ஐ,ஜே,கே இருக்கைகளுக்கு ரூ.2500, லோயர் ஐ, ஜே,கே இருக்கைகளுக்கு ரூ.4000, அப்பர் சி, டி, இ இருக்கைகளுக்கு ரூ. 3500, கேஎம்கே டெடர்ஸ்-க்கு ரூ.6000 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.