தொடர் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற தயார்... 3 கண்டிஷன் போட்ட சோனம் வாங்சுக்..!!

 
Q

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி, டில்லி ஜந்தர் மந்தரில், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் 21 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்.

உடல்நிலையைக் கருதி நேற்று முன்தினம் (ஜூலை 18) அவரை, போலீசார் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, 3 நிபந்தனைகளை சோனம் வாங்சுக் விதித்துள்ளார். இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று நிகழ்ந்தால் கூட இந்தப் போராட்டத்தை நிறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது நிபந்தனைகள்,

* கல்வி முறையில் தோல்வி மற்றும் வினாத்தாள் கசிவுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.

* சிஜேபி இயக்கத்தினர் இன்று நடத்தும் பார்லி முற்றுகை பேரணியின் போது, பல்வேறு அரசியல் கட்சிகளின் எம்பிக்களும், தலைவர்களும் எங்களைச் சந்தித்து, இந்தப் பிரச்னையை பார்லியில் எழுப்புவோம் என்று உறுதியளிக்க வேண்டும்.

* எனது உடல்நிலை பாதிப்பால் பார்லி முற்றுகை பேரணியில் என்னால் பங்கேற்க முடியாவிட்டால், பல்வேறு கட்சிகளின் எம்பிக்கள் மற்றும் தலைவர்கள், மருத்துவமனைக்கே நேரில் வந்து மேலே சொன்ன உறுதியை அளிக்க வேண்டும்.

மேலும், சப்தர்ஜங் மருத்துவமனையில் எனது சுதந்திரத்தை இழந்து, சட்டவிரோத தடுப்புக் காவலில் இருக்கிறேன்,

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.