ரெடியான லிஸ்ட்- ஆக்‌ஷனில் இறங்கிய கமிஷனர் அருண்

 
அருண்

புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை காவல் ஆணையர் அருண், அனைத்து காவல் துணை ஆணையர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை காவல் ஆணையர் மாற்றம்: புதிய ஆணையராக அருண் நியமனம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு எதிரொலியாக நேற்று முன் தினம் சென்னை காவல் ஆணையர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் நேற்று சென்னை கூடுதல் ஆணையர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

ரவுடிகளுக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி தரப்படும்: சென்னை காவல் ஆணையர் அருண்  எச்சரிக்கை, தமிழ்நாடு செய்திகள் - தமிழ் முரசு Tamil Nadu News in Tamil ...

இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை காவல் ஆணையர் அருண், 12 காவல் மாவட்ட துணை ஆணையர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். கண்டுபிடிக்க முடியாத வழக்குகளுடைய கோப்புகள், ரவுடிகளின் பட்டியல், குற்றங்கள் அதிகம் நடக்கும் காவல் மாவட்ட விபரங்களை பெற்று ஆலோசனை நடத்தினார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள், இனி எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரவுடிகளின் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும், முன்னெசரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சென்னை காவல் ஆணையர் அருண் அறிவுரை வழங்கியுள்ளார்.