பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துகள் - முதல்வர் ஸ்டாலின்

 
stalin

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். 

school

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன்!


பெற்றோர்களும், ஆசிரியர்களும் மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களின் மனநிலை - உடல்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாசிப்பிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டி மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.