18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் ஆர்.சி ரத்து, ரூ.25,000 அபராதம்

 
18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால்

18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் ஆர்.சி.யை ரத்து செய்யும் விதிமுறை ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

traffic police chennai

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சிலர் அதிவேகத்தில் சென்று வீலிங் செய்து சாகசம் செய்யும்  வீடியோ சமூக வலையதளங்களில் பரவுவது வாடிக்கை. இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து காவல்துறை வீலிங் செய்த இளைஞர்களை கைது செய்தனர். இது போன்று போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீலிங் செய்யும் இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் உத்திரவிட்டுள்னர். அதன் பேரில் காவல்துறையினர் வீலிங் செய்யும் இளைஞர்களை கண்காணித்து வருகின்றனர். இவர்களில் சிலர் மைனர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை கட்டுப்படுத்த புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 18 வயதுக்கும் குறைவானவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால், அவர் ஓட்டிய வாகனத்தின் ஆர்.சியை ரத்து செய்யும் புதிய விதிமுறை ஜூன் 1ம் தேதி அமலாக உள்ளது. மேலும் பிடிபடும் மைனருக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பதோடு, 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமமும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.