அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு - R.B.V.S. மணியனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

 
tn

அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர் R.B.V.S. மணியனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்பேத்கர், திருவள்ளுவர் ஆகியோரை இழிவுபடுத்திப் பேசிய வழக்கில், ஆன்மிக சொற்பொழிவாளர் RBVS மணியன்  கைது செய்யப்பட்டுள்ளார். அம்பேத்கர் , வள்ளுவர் குறித்து இழிவாக பேசிய நிலையில் , இது குறித்து போலீசில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து இன்று காலை ஆர்பிவிஎஸ் மணியன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆர்பிபிஎஸ் மணியன்  மீது 153, 153 a, 505 1(b) 505(2) தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஆர்பிவிஎஸ் மணியனை சென்னை அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.  

இந்த நிலையில், அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர் R.B.V.S. மணியனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணியனின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என மணியன் தரப்பு கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அவரது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.