ஆர்பிவிஎஸ் மணியன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

 
tn

ஆர்பிவிஎஸ் மணியன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது. 

tn

அம்பேத்கர், திருவள்ளுவர் ஆகியோரை இழிவுபடுத்திப் பேசிய வழக்கில், ஆன்மிக சொற்பொழிவாளர் RBVS மணியன்  கைது செய்யப்பட்டுள்ளார்.அம்பேத்கர் , வள்ளுவர் குறித்து இழிவாக பேசிய நிலையில் , இது குறித்து போலீசில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து இன்று காலை ஆர்பிவிஎஸ் மணியன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை திநகர் இல்லத்தில் இருந்த அவரை கைது செய்த போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

tn

இந்நிலையில் அம்பேத்கர் ,திருவள்ளுவர் ,பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை பற்றி அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள ஆர்பிபிஎஸ் மணியன்  மீது 153, 153 a, 505 1(b) 505(2) தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஆர்பிவிஎஸ் மணியனை சென்னை அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.