₹2000 நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது RBI!

 
 ₹2000 நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது RBI!


₹2000 நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக  விரிவான வழிகாட்டு நெறிமுறையை ஆர்.பி.ஐ வெளியிட்டுள்ளது.  

கடந்த 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட  ரூ.2000 நோட்டுகள் செல்லாது என கடந்த 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூபாய் நோட்டுக்களை வங்கியில் மாற்றிக்கொள்ள செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாள் ஒன்றுக்கு 5 நோட்டுகள் அதாவது ரூ.20,000 வரை மட்டுமே மாற்ற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரூ.2000 நோட்டுகளை மாற்ற மக்கள் வங்கிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.  இந்நிலையில் தற்போது ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.  

rbi

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்,  2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற  மக்களுக்கு போதிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  கோடைக்காலம் என்பதால்  பொதுமக்கள் காத்திருக்க நிழலான இடம் ( பந்தல்) அமைக்க வேண்டும், குடிநீர் உள்ளிட்ட வதசிகள் போன்றவற்றை வங்கிகள் செய்துதர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.  மேலும், நாள் ஒன்றுக்கு எத்தனை ரூபாய் நோட்டுகள் மாற்றபடுகிறது என்பது குறித்து ஆர்.பி.ஐக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும்,  வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் தங்களது  ரூபாய் நோட்டுகளை மாற்ற உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

2000 ரூபாய் நோட்டுகளை  மாற்றும் பணி நாளை ( மே 23) முதல் தொடரும் நிலையில்,  மக்கள் நோட்டுகளை மாற்ற அவசர பட வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  அத்துடன் செப்டம்பர் இறுதிவரை ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருக்கும் என்றும், 4 மாத காலம் அவகாசம் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.