ஜனநாயகன் ரிலீஸ் அன்று அரசு விடுமுறையா?- ஆர்.பி.உதயகுமார்

 
rb udhayakumar vijay

ஜனநாயகன் திரைப்படத்தை திருவிழா போல கொண்டாட வேண்டும் என அமைச்சர் ஆனந்த் பேசியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகரும், முதலமைச்சருமான விஜய் நடித்துள்ள ஜனநாயன் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று இரவு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே கேரளம், கர்நாடகாவில் டிக்கெட் புக்கிங் ஆரம்பித்து விட்டது. வரும் 23ம் தேதி ஜனநாயகன் படம் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசி்ய ஆர்.பி.உதயகுமார், “ஜனநாயகன் திரைப்படத்தை திருவிழா போல கொண்டாட வேண்டும் என அமைச்சர் ஆனந்த் பேசுகிறார். இப்படத்தின் வெளியீட்டு நாளன்று அரசு விடுமுறையே அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏற்கனவே நிலவும் பிரச்சனைகளை சரி செய்ய திணறும் விஜய் அரசு மேகதாது பிரச்சனையை எப்படி தீர்க்கும்? மின்வெட்டு, பெண்கள் பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனைகளில் விஜய் அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.