"அதிமுக-பாஜக கூட்டணியை தொடர்ந்து விமர்சித்தால் ஆர்ப்பாட்டம்"- ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

 
udhayakumar

அதிமுக-பாஜக கூட்டணியை தொடர்ந்து விமர்சித்தால் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என  எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், “தமிழ்நாட்டில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை பார்க்க முடிகிறது. எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ள அதிமுக-பாஜக வெற்றி கூட்டணியை ஆளுங்கட்சியான திமுக அரசு நடுநடுங்கியுள்ளது. ஏனென்றால் ஆளுங்கட்சியான திமுக மக்களுக்கு சேவை செய்யாமல், குறுக்கு வழியில் மீண்டும் ஆட்சியை தொடரலாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கண்ட கனவில் இடி விழுந்துள்ளது. திமுகவின் எதிர்காலம் கேள்வி குறியானதால் ஸ்டாலின் உளறிக்கொண்டிருக்கிறார். ஸ்டாலின் அறிக்கையை யாரும் பொருட்படுத்த தயாராக இல்லை. 

இந்த கையாளாகாத அரசை, நீலிக்கண்ணீர் வடிக்கிற அரசை வைத்து கொண்டு, ஆட்சி அதிகாரத்தை வைத்து தன் பிள்ளைகளை வளர்த்துக் கொள்கிற இந்த அரசுக்கு இனியும் வெண்சாமரம் வீசுவார்கள் என்று நினைத்தால், அவர்கள் தலையிலே இருந்திருக்கிற இடியாய், இன்றைக்கு அதிர்ச்சியிலே உறைந்து போய், சட்டமன்றத்தில் ஸ்டாலின் சொல்லுகிறார் ஆளும் அதிமுக அரசு என்று, நிச்சயம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சட்டசபையில் ஆளுகிற வரிசையில் உட்கார்ந்து எடப்பாடியார் முதலமைச்சராக இருந்து இந்த நாட்டு மக்களுக்கு திட்டங்களை வழங்குகிற அந்த நாள் தொலைவில் இல்லை. மக்கள் விரும்பும் கூட்டணியான அதிமுக, பாஜக கூட்டணியை அரசியல் நாகரிகம் இல்லாமல் தொடர்ந்து விமர்சித்தால், எடப்பாடி பழனிசாமி ஆணை பெற்று அம்மா பேரவை சார்பில் ஸ்டாலினை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட அஞ்ச மாட்டோம்” என்றார்.