"அதிமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் சட்ட நடவடிக்கை"- ஆர். பி. உதயகுமார்
தவெக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல்குமாருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். அதிமுக பெயரை தேவையின்றி இழுத்துப் பேசுவதை அமைச்சர் நிர்மல்குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்த்து வாக்களிக்க ரூ.30 கோடி பேரம் பேசப்பட்டதாக எம்எல்ஏ முஸ்தபா கூறியுள்ளார். தவெக அரசை கவிழ்க்க திமுகவும் அதிமுகவும் கூட்டுச் சதி செய்வதாக நிர்மல்குமார் கூறியிருக்கிறார். அமைச்சர் நிர்மல்குமாரின் குற்றச்சாட்டு ஆதாரமற்ற, அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். ஜனநாயக ரீதியில் மக்களைச் சந்தித்து ஆட்சிக்கு வரத் தெரியும். குறுக்குவழியில் ஆதாயம் தேட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. ஊழல்களை திசை திருப்புவதற்காக அதிமுகவின் பெயரை பயன்படுத்துகிறார்கள்" என்றார்.

