“திரிஷா துணை முதல்வர்... ஜனநாயகம் ஊத்திக்கொண்டதால் 3 நாட்களாக விஜயை காணும்”- ஆர்.பி.உதயகுமார்
திரிஷா துணை முதலமைச்சரானால் கூட அது யாரையும் ஆச்சரியப்படுத்தாது என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கருத்து தெரிவித்தார்.
சிவகங்கையில் இன்று நடைபெற்ற அம்மா பேரவை கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் அண்ணன் ஆர்.பி. உதயகுமார், “ முதலமைச்சர் விஜய் தனது நண்பர்களுக்கு அரசுப் பதவிகளை வழங்கி வருகிறார். நடிகை திரிஷாவுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்தாலும் ஆச்சரியமில்லை. மேகதாது, காவிரி, தமிழ்நாட்டிற்கு ஏற்படும் வறட்சி குறித்து கேள்வி எழுப்பினால் வாய் திறக்க மறுக்கும் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், ஜனநாயகன் திரைப்படத்தில் பாப்கான் சாப்பிட மட்டும் வாய் திறக்கிறார். ஜனநாயகன் படம் ஊத்திக்கொண்டது எனக்கூறி 3 நாட்ளாக முதல்வர் தலைமைச் செயலகம் வரவில்லை.
எடப்பாடி பழனிசாமியிடம் உண்மை, உழைப்பு, கருணை இருக்கிறது. விஜய் போல வசீகரம், பஞ்ச் டயலாக் பேசி இளைஞர்களை பஞ்சராக்க அவருக்கு தெரியவில்லை. மக்கள் மனதை படிக்க தெரிந்த பழனிசாமிக்கு நடிக்க தெரியவில்லை. அமைச்சர் பதவிக்காகத்தான் சில எம்எல்ஏக்கள் அதிமுகவிலிருந்துராஜினாமா செய்துள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் விஜய்யை காப்பாற்றியவர் பழனிசாமி. ஆனால், அவரை மனிதாபிமானம் இல்லாமல் விஜய் பேசி வருகிறார். அதிமுகவிலிருந்து வேறு கட்சிக்கு சென்றோர் உரிய மரியாதை கிடைக்காமல் உள்ளனர்” என விமர்சித்தார்.

