ஈபிஎஸ் கை நீட்டுபவரே பிரதமராக வருவார்- ஆர்.பி.உதயகுமார்
பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு பிரதமர் வேட்பாளரை எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சுந்தரக்குண்டு கிராமத்தில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை ஒட்டி அன்னதான விழாவை துவக்கி வைக்க அத்தொகுதியின் எம்எல்ஏவும், முன்னாள் அதிமுக அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வருகை தந்தார். அவரை மறித்த கிராமத்தினர், இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக முறையிட்டும், பேருந்து நிழற்குடை அமைக்கப்படவில்லை எனவும் , கண்மாய்கள் தூர்வரப்படாமல் உள்ளதாகவும் புகார் அளித்தனர். அதற்கு ஆர்.பி. உதயகுமார் விரைவில் அப்பணிகளை செய்து முடிப்பதாக உறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்டதயாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், “அதிமுக சார்பில் பிரதமர் வேட்பாளரை இதுவரை அறிவிக்கப்படவில்லை. வருகிற ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுக்கு பிறகு, பிரதமர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி யாரை கை நீட்டுகிறாரோ அவரே பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார்.


