கருத்துவேறுபாடுகளை தாண்டி அதிமுக எம்பியாக டெல்லியாக பணியாற்றிவருகிறேன் - ரவீந்திரநாத்

 
mp ravindranath

தென்காசி மாவட்டம் சங்கரன் கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் இராஜபாளையத்தில் உள்ள தனது ஆதரவாளர்களை சந்தித்தார்.

லண்டனிலிருந்து ஓ.பி.ரவீந்திரநாத் வந்த நன்றி... அப்படி என்ன செய்தார்  ஓ.பி.எஸ் மகன்..? | Thank you OP Ravindranath from London ... What did OPS  son do like that

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ரவீந்திரநாத், “கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ. பன்னீர்செல்வத்தை நீக்க முடியாது. தமிழகத்தை பொறுத்தவரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றரை கோடி விசுவாசம் தொண்டர்கள் இயக்கத்தை மேலும் வளர வைக்க எந்த ஒரு பிரதிபலனும் இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கின்றேன். எளிய தொண்டர்கள் இருக்கும் வரை ஒரு எளிய தொண்டன் தான் தலைமை பொறுப்புக்கு வர முடியும். தலைமை கழகம் யாருக்கு சொந்தம் என்று தற்போது தெளிவுபடுத்த முடியாத நிலை உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி தலைமைக் கழக அலுவலகத்தில் சாவி கொடுக்கப்பட்டது. இது குறித்து மேல் முறையீடு செய்தபோது இரண்டு வாரங்களில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. அதிமுகவில் உள்ள உண்மையான எளிய தொண்டன் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும் வண்ணம் தீர்ப்பு அமையும்.

தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெற்று வருகிறது. என்னுடைய பங்களிப்பு குறித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் முடிவு எடுப்பார். டிடிவி தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து கொள்வார்களா என்ற கேள்விக்கு இதுவரை சந்திப்பு நடைபெறவில்லை. இனிமேல் சந்திப்பு நடைபெறுமா என்பது தொண்டர்கள் மனதில் நினைப்பது போல் இருக்கும். தமிழகத்தில் உள்ள 40 எம்பிக்களில் 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரே அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் நான்தான். டெல்லியை பொறுத்தவரை 540 எம்பிக்களில் அதிமுக ஜீரோ என்ற இடத்தில் இல்லாமல் ஒரு எம்பி இருக்கிறார் என்ற கௌரவமான நிலை உள்ளது. எனவே கட்சியில் நடந்து வரும் கருத்து வேறுபாடுகளை தாண்டி தற்போது வரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்.பி யாகத்தான் டெல்லியில் பணியாற்றி வருகிறேன்” எனக் கூறினார்.