சொகுசு பங்களாவுக்கு EMI கட்டாத ரவி மோகன்..!! நோட்டீஸ் அனுப்பிய வங்கி நிர்வாகம்..!
நடிகர் ரவி மோகன் ஈசிஆர் சொகுசு பங்களா வீட்டிற்கு வாங்கிய கடனுக்கு மாத தவணையை கட்டாததால் வங்கி நிர்வாகம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது
நடிகர் ரவி மோகன், பாபி டச் கோல்ட் யுனிவர்சல் என்ற தயாரிப்பு நிறுவனத்தில் இரண்டு படம் நடிப்பதற்காக கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. முதல் படத்தில் நடிப்பதற்காக முன்பனமாக ரூபாய் 6 கோடி வாங்கி இருந்த நிலையில், அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் படம் நடித்து கொடுக்காமல், வேறு நிறுவனத்தின் படத்தில் நடிகர் ரவி மோகன் நடிப்பதாகவும், இதுகுறித்து ரவி மோகனிடம் கேட்டபோது வாங்கிய முன்பத்தை திருப்பி தருவதாக கூறினார் என்றும், ஆனால் பணத்தை திருப்பி கொடுக்காமல் அவரது சொந்த நிறுவனத்தில் படம் நடித்து வருவதாகவும் தயாரிப்பு நிறுவனம் புகார் அளித்துள்ளது, மேலும், தங்களது பணத்தை திருப்பி தரும்படி அந்நிறுவனத்தின் இயக்குனர் பாலசந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அத்துடன் நடிகர் ரவி மோகனின் சொத்தான ஈசிஆர் ஈஞ்சம்பாக்கம் சொகுசு பங்களாவை ஜப்தி செய்து தரும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் நடிகர் ரவி மோகன் ஈசிஆர் சொகுசு பங்களா தனியார் வங்கியில் கடன் பெற்று வாங்கியதாகவும், கடந்த 10 மாதங்களாக மாதம் தவணை செலுத்தவில்லை கூறப்படுகிறது. நடிகர் ரவி மோகன் ஈசிஆர் சொகுசு பங்களா வீட்டை மாத தவணை கட்டாத நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக வங்கி நிர்வாகம் கொரியர் மூலம் நோட்டீஸ் அனுப்பினர். வங்கி நோட்டீசை கொண்டு வந்த பெண் கொரியார் ஊழியர் கொண்டு வந்த நோட்டீசை வாங்க மறுத்து விட்டார்கள் என்றும் வங்கியில் வந்து பெற்றுக் கொள்கிறோம் என்று கூறியதாக தெரியவந்தது.

